
கலர் கலர் கேரட் ச்சோவ் ச்சோவ் பொரியல்
தேவையான பொருட்கள்:
- கேரட் – 1
- ச்சோவ் ச்சோவ் – 1
- கடலை பருப்பு – 1/2 கப்
- மஞ்சள் பொடி – 1 மேசை கரண்டி
- உப்பு – 1 மேசை கரண்டி
- சர்க்கரை – சிறிதளவு
- தேங்காய் – 1/2 கப்
- கருவேப்பிலை – சிறிதளவு
- தாளிக்க:
- சூரிய காந்தி எண்ணெய் – 2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 மேசை கரண்டி
- மிளகாய் வற்றல் – 1
செய்முறை:
- கடலை பருப்பை 1 மணி நேரம் நீரில் ஊற வைத்துக்கொள்ளவும்
- ஒரு வாணலியில் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்
- ஊற வாய்த்த கடலை பருப்பினை சேர்த்து வேக வைக்கவும்
- கடலை பருப்பு வெந்ததும் அதனுடன் நறுக்கிய கேரட் மற்றும் ச்சோவ் ச்சோவ் சேர்த்து வேக வைக்கவும்
- இதனுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்
- தண்ணீர் நன்றாக குறைந்து காய்கறிகள் வெந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்
- தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒரு வாணலியில் தாளித்து பொரியலில் சேர்க்கவும்
- இப்போது சுவை மிகுந்த கலரான கேரட் / ச்சோவ் ச்சோவ் பொரியல் தயார்.
- இதன் காணொளியினை பின்வரும் இணைப்பில் காணவும்