Karchikkai
Festival Special Snacks Recipe

கிருஷ்ணஜெயந்தி ஸ்பெஷல் -கர்ச்சிக்காய்

Dharsh

தேவையான பொருட்கள்:

பூரணம்:

  • எள் – 25 கிராம்
  • ஏலக்காய் – 5
  • வெள்ளம் – 1 கப்
  • தேங்காய் – 1 கப்
  • தண்ணீர் – தேவையான அளவு
  • எண்ணெய் [சூரிய காந்தி] – தேவையான அளவு

மேல் மாவு:

தண்ணீர் – 200 மிலி
உப்பு – சிறிதளவு
அரிசி மாவு – 200 கிராம்
வெண்ணெய் – சிறிதளவு

செய்முறை:

பூரணம்:

  • அடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வெல்லம் சேர்க்கவும்
  • வெல்லம் நன்றாக கரைந்ததும் தூசிகள் இல்லாமல் வடிகட்டவும்
  • இந்த வெல்ல கரைசலை வாணலியில் நன்றாக கொதிக்க விடவும்
  • இதில் துருவிய தேங்காய் மற்றும் பொடித்த எள்ளினை சேர்த்து பூரண பதம் வரும் வரை நன்றாக கிளறவும்
  • இந்த கலவை வாணலியில் ஒட்டாமல் வரும் பொழுது இறக்கி ஆற விடவும்
  • பூரணம் நன்றாக ஆறியதும் சிறு சிறு பூரண உருண்டைகளாக நீளமாக உருட்டி வைக்கவும்

மேல்மாவு:

  • வாணலியில் 250 மிலி தண்ணீர் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்க்கவும்
    தண்ணீர் கொதி வந்ததும் அரிசி மாவினை போட்டு கிளறவும்
    மாவினை அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்
    கலவை சற்று இளகளாக இருந்தாலும் பரவாயில்லை
  • கிளறிய மாவினை ஒரு தட்டில் எடுத்து அதனுடன் ஒரு மேசை கரண்டி உளுத்தம் பொடி,
    1 மேசை கரண்டி வெண்ணெய், 1 மேசை கரண்டி அரிசி மாவினை சேர்க்கவும்
  • சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாக பிசையவும்
    சிறு சிறு உருண்டைகளாக்கி கப் வடிவில் திரட்டி கொள்ளவும்
  • இதனுள் பூரணத்தை சேர்த்த்து கொழுக்கட்டைகளாக செய்து கொள்ளவும்
  • வாணலியில் எண்ணெய் சேர்த்த்து நன்றாக சூடு வந்ததும் கொழுக்கட்டைகளை பொறித்து எடுக்கவும்
    இப்போது சுவையான எள்ளின் வாசனை நிரம்பிய கர்ச்சிக்காய் தயார்
  • இந்த சுவையான உணவின் காணொளி காட்சியினை பின்வரும் இணைப்பில் காணவும்

Leave A Comment