
விளாம் பழ ரசம்
தேவையான பொருட்கள்:
- விளாம் பழம் – 1
- தக்காளி பழம் – 1
- பச்சை மிளகாய் – 2
- புளி – எலுமிச்சங்காய் அளவு
- பெருங்காயம் – சிறிதளவு
- மஞ்சள் பொடி – 1 சிறு மேசை கரண்டி
- ரச பொடி – 2 மேசை கரண்டி
- வேக வைத்த துவரம் பருப்பு – 1 கரண்டி
தாளிக்க:
- நெய் – 1 மேசை கரண்டி
- கடுகு – 1 மேசை கரண்டி
- ஜீரகம் – 1 மேசை கரண்டி
- கொத்தமல்லி தழை
செய்முறை:
விளாம் பழத்தை உடைத்து அதன் ஓட்டினை தனியாக பிரித்து வைத்து கொள்ளவும்
புளியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்
ஒரு வாணலியில் புளி கரைசலை ஊற்றவும்
இதில் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், பெருங்காய பொடி , மஞ்சள் பொடி , ரச பொடி சேர்த்து புளி வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும்
கலவை நன்றாக கொதித்ததும் அதில் வேக வைத்த பருப்பினை சேர்த்த்து ஒரு கொதி வரும் வரை வைக்கவும்
விளாம் பழ ஓட்டினை கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும்
ஒரு கொதி வந்ததும் ரசத்தினை இறக்கி இய்ய சொம்பில் ஊற்றவும்
கடுகு, ஜீரகம் நெய்யில் தாளித்து கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்
சுவையான விளாம் பழ ரசம் தயார்.
விளாம் பழ உள் கலவையை வெள்ளம் சேர்த்த்து சாப்பிடலாம்.
சுவையான இந்த விளாம் பழ ரசத்தின் காணொளி காட்சியினை பின்வரும் காணொளி பதிவினில் காணவும்.