
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் – அத்தி பழ கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
இனிப்பு பூரணம்:
- அத்தி பழம் – 4
- பேரீச்சம் பழம் – 4
- தேங்காய் – 1/2 கப்
- தண்ணீர் – தேவையான அளவு
- ஏலக்காய் பொடி – 1/4 மேசை கரண்டி
- நெய் – 1/2 மேசை கரண்டி
- வெல்லம்
உப்பு பூரணம்:
- முழு உளுத்தம் பருப்பு – 1/2 கப்
- பச்சை மிளகாய் – 4
- உப்பு – தேவையான அளவு
- கடுகு – 1 மேசை கரண்டி
- நல்லெண்ணெய் – 2 மேசை கரண்டி
- பெருங்காயம்
- கருவேப்பிலை
- தேங்காய்
செய்முறை:
இனிப்பு பூரணம் :
அடி கனமான வாணலியில் சிறிது வெள்ளம் சேர்த்து அது முழுகும் வரை தண்ணீர் சேர்க்கவும்
வெல்லம் நன்றாக கரைந்ததும் தேங்காய் மற்றும் பொடித்த அத்தி பழம், பேரிச்சம் பழம் சேர்க்கவும்
வாணலியில் ஒட்டாமல் வரும் வரை நன்றாக கிளறவும்
சிறிது ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்து இறக்கவும்
பூரணம் நன்றாக ஆறிய பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
உப்பு பூரணம்:
முழு உளுந்தை 2 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்
இதனுடன் பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு , கருவேப்பிலை சேர்த்து கோரா கொரப்பாக அரைத்து கொள்ளவும்
சிறிதளவு தேங்காய் இந்த கலவையில் சேர்க்கவும்
இட்லி அடுக்கில் சிறு சிறு இட்லிகளாக இந்த கலவையை வேகா வைத்து இறக்கவும்
இட்லிகள் ஆறியதும் உதிர்த்து பூரணமாக உருட்டி வைத்து கொள்ளவும்
கொழுக்கட்டை மேல் மாவு:
பச்சை அரிசியை ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைத்து மைய்ய அரைத்து கொள்ளவும்
ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து இந்த கலவையை சேர்த்த்து நன்றாக கிளறவும்
மாவு நன்றாக வெந்து கலவை வாணலியில் ஒட்டாமல் வந்ததும் இறக்கி ஆற வைக்கவும்
கிளறிய மாவினை சிறு சிறு பகுதிகளாக பிரித்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
இதிலிருந்து சிறு சிறு கிண்ணம் செய்து பூரண உருண்டைகளை வைத்து மூடவும்
இந்த கொழுக்கட்டைகளை இட்லி அடுக்கில் வைத்து வேக வைத்து எடுக்கவும்
இப்போது விநாயகருக்கு மிகவும் பிடித்த சுவையான கொழுக்கட்டைகள் தயார்
இதனை காணொளி ஆக கீழாய் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காணவும்