
கிருஷ்ணஜெயந்தி – கோகுலாஷ்டமி ஸ்பெஷல் – அவல் கேசரி
தேவையான பொருட்கள் :
- அவல் – 1 கப்
- சர்க்கரை – 1 கப்
- ஏலக்காய் – பொடித்தது – 1 மேசை கரண்டி
- நெய் – 200 கிராம்
- உப்பு – 1 சிட்டிகை
- தண்ணீர் – 2 கப்
- முந்திரி பருப்பு – விருப்பத்திற்கு ஏற்ப
- கேசரி கலர்
செய்முறை:
- வாணலியில் 2 மேசை கரண்டி நெய் விட்டு முந்திரி பருப்புகள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்
- அதே வாணலியில் அவளை சேர்த்து பட பட என பொரிந்து வரும் வரை வருது கொள்ளவும்
இப்போது நல்ல மணமும் வரும்
பொறித்த அவல் நன்றாக ஆறிய பிறகு அதனை மிக்ஸ்யில் ரவை அளவிற்கு அல்லது அதை விட சிறியதாக பொடித்து கொள்ளவும் - வாணலியில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
கொதி வந்ததும் பொடித்த அவலை சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும்
அவல் நன்றாக வெந்ததும் சிறிது சிறிதாக சர்க்கரை சேர்க்கவும்
சர்க்கரை நன்றாக கலந்ததும் 2 மேசை கரண்டி நெய் சேர்த்து ஒன்றாக கலக்கவும்
கேசரி கலர் பொடி-ஐ தண்ணீரில் மிக சிறிதளவு கலந்து கேசரி கலவையில் சேர்க்கவும்
தேவையான அளவு பொடித்த ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
மேலும் சிறிது நெய் சேர்த்து ஒன்றாக கலந்து நன்றாக கொதிக்க விடவும் - இப்போது சுவைமிகு அவல் கேசரி தயார்.
- கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த குசேலர் பெருமை சொல்லும் அவல் கேசரி தயார்
- இளஞ்சசூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறாலாம்
அவல் கேசரி செய்முறை விளக்கத்தை ஒளி நாடாவாக பின்வரும் இணைப்பில் காணவும்