
மாங்காய் பச்சடி
தேவையான பொருட்கள்
- ஒட்டு மாங்காய்
- பச்சை மிளகாய்
- தேவையான அளவு தண்ணீர்
- உப்பு
- மஞ்சள் பொடி
- வெல்லம்
தாளிக்க தேவையான பொருட்கள்
- கடுகு
- உளுத்தம் பருப்பு
- மிளகாய் வற்றல்
செய்முறை
- ஒட்டு மாங்காய் சீவி சிறு துண்டுகள் ஆக்கவும்; தோலை நீக்க அவசியம் இல்லை
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் மாங்காய் துண்டுகளை சேர்த்து நன்றாக வேக வைக்கவும்
மாங்காய் நன்றாக வெந்ததும் தேவையான அளவு வெல்லம் சேர்க்கவும்
வெல்லம் நன்றாக கரைந்து 10 நிமிடங்கல் கரைந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும் - ஒரு வாணலியில் ஒரு மேசை கரண்டி எண்ணெய் சேர்க்கவும்
எண்ணெய் சூடானவுடன் அரை மேசை கரண்டி கடுகு சேர்க்கவும்
கடுகு வெடித்ததும் முழு வெள்ளை உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறம் ஆக வறுக்கவும்
ஒரு மிளகாய் வற்றல் சேர்த்து தாளித்து இறக்கியுள்ள பச்சடியில் சேர்க்கவும்
சுவைமிகு மாங்காய் பச்சடி தயார்
இந்த பச்சடி செய்முறை விளக்கத்தை ஒளி நாடாவாக பின்வரும் இணைப்பில் காணவும்